/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீடுகள்தோறும் தேசியக்கொடி பா.ஜ.,வினருக்கு அறிவுரை
/
வீடுகள்தோறும் தேசியக்கொடி பா.ஜ.,வினருக்கு அறிவுரை
ADDED : ஆக 10, 2025 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி, பா.ஜ.,வின், சேலம் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் பயிலரங்க கூட்டம், இடைப்பாடியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஹரிராமன் தலைமை வகித்து பேசியதாவது:
கட்சி நிர்வாகிகள் அனைவரும், வீடுகள்தோறும் தேசியக்கொடிகளை வழங்க வேண்டும்.
அனைத்து இல்லங்களிலும் கொடி ஏற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல் ராணுவ முன்னாள் வீரர்கள், முன்னாள் போலீஸ்காரர்களின் வீடுகளுக்கு சென்று கொடியை வழங்கி, அவர்களிடம் ஆசி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட பொதுச்செயலர்கள் ராஜசேகரன், ரவி, பரமேஸ்வரன், இடைப்பாடி நகர தலைவர் கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.