/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லோக்சபா தேர்தலில் வெற்றி தேடித்தர காங்., சிறுபான்மை பிரிவுக்கு அறிவுரை

ADDED : ஜன 06, 2024 12:47 PM
சேலம்: காங்., கட்சியின், சேலம் மாநகர் மாவட்ட அலுவலகத்தில், தமிழ்நாடு காங்., கமிட்டி சிறுபான்மை துறை சார்பில் கலந்தாய்வு கூட்டம், 139வது ஆண்டு காங்., தொடக்க விழா, ரத்த தான முகாம் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம் பாஷா கலந்து கொண்டு பேசினார்.
அதில் சிறுபான்மை பிரிவினர், லோக்சபா தேர்தலில் தீவிரமாக பணியாற்றி, காங்., உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கு வெற்றியை தேடித்தருவது; கட்சியின், 138ம் ஆண்டு நிறைவை கொண்டாடும்படி அகில இந்திய காங்., கமிட்டிக்கு உறுப்பினர்கள் முதல் அனைத்து நிர்வாகிகளும் கட்சி நிதியாக, ஆன்லைனில் தலா, 138 ரூபாயை உடனே செலுத்துவது என முடிவு செய்யப்பட்டது. மாநில துணைத்தலைவர் அஷ்ரப் அலி, சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஷாநவாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து மாநகர் தலைவர் பாஸ்கர் கூறுகையில், ''பல்வேறு கட்சியை சேர்ந்த, 200 பேர், காங்.,கில் இணைந்தனர். அவர்களில், 40 பேருக்கு உடனே சிறுபான்மை பிரிவில் பல்வேறு பதவிகளில் நியமித்து அதற்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது,'' என்றார்.