sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சொட்டு நீர் பாசன பராமரிப்பு விவசாயிகளுக்கு அறிவுரை

/

சொட்டு நீர் பாசன பராமரிப்பு விவசாயிகளுக்கு அறிவுரை

சொட்டு நீர் பாசன பராமரிப்பு விவசாயிகளுக்கு அறிவுரை

சொட்டு நீர் பாசன பராமரிப்பு விவசாயிகளுக்கு அறிவுரை


ADDED : டிச 03, 2024 01:30 AM

Google News

ADDED : டிச 03, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி, டிச. 2-

சொட்டு நீர் பாசன பராமரிப்பில், நவீன வழிமுறைகள் குறித்து வேளாண் துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து, வீரபாண்டி வட்டார வேளாண் துறை உதவி இயக்குனர் கார்த்திகாயினி அறிக்கை:

சொட்டு நீர் பாசன அமைப்புகளை பராமரிப்பு செய்வது முக்கியம். தினமும் சல்லடை தட்டு, வடிகட்டியை சுத்தப்படுத்த வேண்டும். வடிகட்டி வால்வை திறந்து வைத்து தண்ணீரை முன்னோக்கியும், பின்னோக்கியும் ஓட விட்டு வெளியேற்ற வேண்டும். அனைத்து கேட்வால்வுகளிலும் தண்ணீர் வருகிறதா, அடைத்துள்ளதா என்பதை சரி பார்த்தபின் நீர் பாய்ச்ச வேண்டும்.

வாரம் ஒருமுறை நீர் கசிவு உள்ள உமிழிகள் மற்றும் அடைப்புள்ள உமிழிகளை கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும். உமிழிகளுக்கு நீர் கொண்டு வரும் குழாய்கள் வளைந்து நெளிந்து கிடந்தால் அவற்றை இழுத்து நேராக வைக்க வேண்டும்.

உமிழி வாய் பகுதியில் உப்பு படிந்திருந்தால் அமிலம் கொண்டு சுத்தம் செய்து விட வேண்டும். மின்மோட்டார் பெட்டிகளில் பல்லி, குளவி, குருவி ஆகியவை கூடு கட்டியிருந்தால் அதை அகற்றி சுத்தமாக வைக்க வேண்டும். அனைத்து கிளை குழாய்கள், வால்வுகள், கைப்பிடிகள் சரியாக வேலை செய்கிறதா என்பதை கண்காணித்து சரிசெய்ய வேண்டும்.

அதேபோல் மாதம் ஒருமுறை அனைத்து உமிழிகளிலும் ஒரே அளவு நீர் வெளியாகிறதா என பரிசோதனை செய்ய வேண்டும். பயிருக்கு பரிந்துரைத்துள்ள அளவுப்படி உரம் செலுத்தப்படுகிறதா, பயிர்களின் பருவத்துக்கு ஏற்ப உர விகிதம் மாறுகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

பயிர் சாகுபடி முடிந்து அறுவடைக்கு பின் மீண்டும் பயிர் சாகுபடி செய்வதற்கு முன், பிரதான குழாய், கிளை குழாய், பக்கவாட்டு குழாய் மற்றும் உமிழிகளை அமிலம் கொண்டு சுத்தம் செய்து, பழைய ரப்பர் வாசர்களை அகற்றி விட்டு புது வாசர்கள் மாற்றிய பின் பயன்படுத்த வேண்டும். இந்த முறைகளை கடைப்பிடித்து விவசாயிகள் பயன் பெறலாம்.






      Dinamalar
      Follow us