/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தரமான விதைகள் வாங்க விவசாயிகளுக்கு அறிவுரை
/
தரமான விதைகள் வாங்க விவசாயிகளுக்கு அறிவுரை
ADDED : மே 25, 2025 01:16 AM
சேலம் :சேலம் விதை ஆய்வு உதவி இயக்குனர் சித்ரா அறிக்கை: சேலம், நாமக்கல் மாவட்டங்களில், கடந்த, 4 ஆண்டுகளில், 20,403 விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு, 7,654 விதை மாதிரிகள் எடுத்து பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. முளைப்புத்திறன் குறைபாடு காரணமாக, 41 விதை விற்பனை நிலையங்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை, 258 விதை விற்பனை நிலையங்கள் மீது துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனால் விவசாயிகள், விதைகளை வாங்கும் போது உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடமிருந்து வாங்க வேண்டும். குறிப்பாக விற்பனை விலை பட்டியல் கேட்டு பெற வேண்டும். அத்துடன் முளைப்புத்திறன் ஆய்வறிக்கையை சரிபார்க்க வேண்டும். இத்தகைய நடைமுறைகளை விவசாயிகள் பின்பற்றி, விதைகளின் தரத்தை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். இதுதொடர்பாக புகார் இருப்பின், 97874 - 44495 என்ற எண் ணில் தகவல் தரலாம்.