ADDED : டிச 06, 2025 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி அருகே களரம்பட்டியில் மூத்த விவசாயி ஆண்-டியப்பன், 88, தோட்டத்தில் உலக மண் வள விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் சாகுல் அமீத் தலைமை வகித்தார்.
அதில் வேளாண் உதவி இயக்குனர் சுஜாதா(வணிகம் மற்றும் விற்-பனை), மண் பரிசோதனை பரிந்துரைப்படி உரமிட வேண்டும்; ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்து, மண் வளத்தை பாதுகாக்க அறிவுறுத்-தினார். மேலும், 'அட்மா' திட்ட பணியாளர்கள் மேற்கொண்டு வரும் பயிர் கணக்கீடு பணியை ஆய்வு செய்தார்.தவிர பரிசோதனைக்கு மண் மாதிரி சேகரிக்கும் முறை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. துணை வேளாண் அலுவலர் ராமு, அட்மா தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா, உதவி வேளாண் அலுவலர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

