/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஊராட்சி பொது நிதி செலவினம்கண்காணிக்க பி.டி.ஓ.,வுக்கு அறிவுரை
/
ஊராட்சி பொது நிதி செலவினம்கண்காணிக்க பி.டி.ஓ.,வுக்கு அறிவுரை
ஊராட்சி பொது நிதி செலவினம்கண்காணிக்க பி.டி.ஓ.,வுக்கு அறிவுரை
ஊராட்சி பொது நிதி செலவினம்கண்காணிக்க பி.டி.ஓ.,வுக்கு அறிவுரை
ADDED : ஜன 05, 2025 01:19 AM
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், 20 ஊராட்சிகள் உள்ளன. அதன் தலைவர்களின் பதவி காலம் இன்றுடன் முடிகிறது.
ஆனால் ஊராட்சிகளில் சில மாதங்களாக தெருவிளக்கு பராமரித்தல், குடிநீர் குழாய் பராமரிப்பு, உதிரி பாகம் வாங்கியது, பொது சுகாதார பணிக்கு பொருட்கள் வாங்கியது ஆகியவற்றுக்கு செலவிட்ட தொகையை பொது நிதியில் இருந்து எடுக்க முயற்சி செய்தனர்.
ஆனால் பணியாளர் சம்பளத்தை தவிர மற்ற செலவினங்களுக்கு ரசீது போடக்கூடாது என, ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்ததால், கடைசி நேரத்தில் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து, ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது: கடந்த, 2024 டிச., 16 முதல், மறு உத்தரவு வரும் வரை, ஊராட்சி பொது நிதியில் ஒப்பந்தப்புள்ளி கோருதல், தேவையற்ற செலவினங்கள், பட்டியல் தொகையில் அதிக செலவினங்கள் அனுமதிப்பதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க, கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். இதை கடைப்பிடிக்க தவறினால், மண்டல துணை பி.டி.ஓ.,க்கள், பி.டி.ஓ.,க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் எச்சரித்துள்ளார். இதனால் கடைசி நேரத்தில், தலைவர்கள் கொடுக்கும் பட்டியல் படி, செலவின தொகை எடுக்கக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.