/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நெய்க்காரப்பட்டி ஊராட்சியை பிரிக்க ஆலோசனை
/
நெய்க்காரப்பட்டி ஊராட்சியை பிரிக்க ஆலோசனை
ADDED : பிப் 16, 2025 02:57 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஒன்றிய கட்டுப்பாட்டில், 20 ஊராட்சிகள் உள்-ளன. அதில் அமானிகொண்டலாம்பட்டி ஊராட்சி, சேலம் மாநக-ராட்சியுடன் இணைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாநகராட்சி எல்லையிலும், சேலம் - கோவை நெடுஞ்சாலையில் உள்ள மற்றொரு ஊராட்சி நெய்க்காரப்பட்டி. அங்குள்ள, 12 வார்-டுகளில், 4,500க்கும் மேற்பட்ட வீடுகளில், 18,000க்கும் மேற்-பட்டோர் வசிக்கின்றனர். சிறு, குறு தொழிற்கூடங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளதால், ஆண்டுக்கு, 40 லட்சம் ரூபாய்க்கு மேல் வரி வருவாய் கிடைக்கிறது.மக்கள் தொகை, உள்ளூர் வரி வருவாய் அடிப்படையில், நெய்க்-காரப்பட்டி ஊராட்சியை இரண்டாக பிரிக்க, ஊரக வளர்ச்சித்-துறை ஆலோசிக்கிறது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், '2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 10,000 பேருக்கு மேல் உள்ள ஊராட்சியை, 2 ஆக பிரிக்கலாம். அப்போதே நெய்க்காரப்பட்டியில், 12,000 பேர் இருந்தனர். தவிர, உள்ளுர் வரி வருவாய் ஆண்டுக்கு, 30 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்-தாலும் பிரிக்கலாம்.
அதனால் நெய்க்காரப்பட்டி ஊராட்சியில் உள்ள, 12 வார்டுகளை, பாதி பாதியாக பிரித்து, என்.மேட்டூர், நெய்க்காரப்பட்டி என, இரு ஊராட்சியாக பிரிக்க ஆலோசித்து முன்னேற்பாடு பணி நடக்-கிறது' என்றனர்.