/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜி.எஸ்.டி., முரண்பாடு வர்த்தகர்களிடம் ஆலோசனை
/
ஜி.எஸ்.டி., முரண்பாடு வர்த்தகர்களிடம் ஆலோசனை
ADDED : அக் 30, 2025 02:34 AM
சேலம், சேலம் ஜி.எஸ்.டி., கோட்டம் சார்பில், ஜி.எஸ்.டி.,யில் உள்ள முரண்பாடு குறித்து வர்த்தகர்களின் ஆலோசனை கேட்பதற்கான கூட்டம், புது பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று நடந்தது. இந்திய வர்த்தக மற்றும் தொழில் மகா சபை தலைவர் கணேசன் தலைமை வகித்தார். அதில் நிறுவன உரிமையாளர்கள், தொழில் அதிபர்கள், ஜி.எஸ்.டி.யில் உள்ள முரண்பாடுகள் குறித்து சந்தேகங்களை கேட்டனர்.
தொடர்ந்து சேலம் கோட்ட துணை கமிஷனர் தனசேகரன்(சட்டம்) கூறுகையில், ''முரண்பாடான வரி விதிப்பை குறைப்பதற்கான நடவடிக்கை, அதை களைவதற்கான நடவடிக்கை எடுக்க, உரிமையாளர்கள், தொழில் அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதை, ஜி.எஸ்.டி., கவுன்சிலுக்கு அனுப்பி ஆலோசனை பெற்ற பின் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

