/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கடமையை செய்ய வேண்டும் பயிற்சி போலீசாருக்கு அறிவுரை
/
கடமையை செய்ய வேண்டும் பயிற்சி போலீசாருக்கு அறிவுரை
கடமையை செய்ய வேண்டும் பயிற்சி போலீசாருக்கு அறிவுரை
கடமையை செய்ய வேண்டும் பயிற்சி போலீசாருக்கு அறிவுரை
ADDED : ஜூலை 09, 2025 02:10 AM
மேட்டூர், மேட்டூர் போலீஸ் பயிற்சி பள்ளியில் கடந்த டிச., 4ல் தொடங்கிய, 8வது பயிற்சி வகுப்பில், 384 போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் நிறைவு விழா நேற்று நடந்தது. அதில் கோவை ஐ.ஜி., செந்தில்குமார், திறந்த ஜீப்பில், பள்ளி முதல்வர் காந்தியுடன் சென்று, பயிற்சி போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றார். தொடர்ந்து சிறப்பாக பயிற்சி பெற்ற போலீசார், அதிகாரிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
பயிற்சி போலீஸ்காரர் மாரிமுத்து, 500க்கு, 461 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். பின் செந்தில்குமார் பேசியதாவது:
தினமும் மக்களை சந்திக்கும் பணி. இரு தரப்பினரை விசாரிக்கும்போது, யார் தரப்பில் நியாயம் உள்ளதோ அவர்கள் வாழ்த்துவர். நியாயம் கிடைக்காதவர்கள் வெளியே சென்று நம்மை துாற்றுவர். போற்றுவர் போற்றட்டும். துாற்றுவர் துாற்றட்டும் என, எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் நம் கடமையை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சேலம் எஸ்.பி., கவுதம் கோயல், பயிற்சி பள்ளி டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பங்கேற்றனர்.