/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'பயறு ஒண்டர்' திரவ ஊக்கி பயன்படுத்திக்கொள்ள அறிவுரை
/
'பயறு ஒண்டர்' திரவ ஊக்கி பயன்படுத்திக்கொள்ள அறிவுரை
'பயறு ஒண்டர்' திரவ ஊக்கி பயன்படுத்திக்கொள்ள அறிவுரை
'பயறு ஒண்டர்' திரவ ஊக்கி பயன்படுத்திக்கொள்ள அறிவுரை
ADDED : நவ 25, 2024 02:51 AM
வீரபாண்டி: வீரபாண்டி வட்டார வேளாண் அலுவலர் நிவேதாஸ்ரீ அறிக்கை:
பயறு வகை பயிர்களான பச்சைப்பயறு, உளுந்து, துவரை ஆகிய பயிர்களில் பூக்கர் உதிர்வதை தடுத்து பயிர் விளைச்சல் அதிகரிக்-கவும், வறட்சியை தாங்கி வளரும் ஊட்டச்சத்துகளை கிரகிக்கும் திறனை அதிகரிக்கச்செய்யும்படி, தமிழக வேளாண் பல்கலை, 'பயறு ஒண்டர்' எனும் திரவ ஊக்கியை அறிமுகம் செய்துள்ளது.
ஏக்கருக்கு, 19 லிட்டர் தண்ணீரில், 1 லிட்டர் பயறு ஒண்டர் திரவ ஊக்கி, ஒட்டும் திரவம், 20 மி.லி., கலந்து, பூக்கும் பருவத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை ட்ரோன் மூலம் தெளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு லிட்டர் திரவம், 545 ரூபாய். இதை, 3 மாதங்கள் வைத்தி-ருந்து, விவசாயிகள் பயன்படுத்தலாம்.