/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாவட்ட எல்லையில் சோதனை மேலும் தீவிரப்படுத்த அறிவுரை
/
மாவட்ட எல்லையில் சோதனை மேலும் தீவிரப்படுத்த அறிவுரை
மாவட்ட எல்லையில் சோதனை மேலும் தீவிரப்படுத்த அறிவுரை
மாவட்ட எல்லையில் சோதனை மேலும் தீவிரப்படுத்த அறிவுரை
ADDED : ஏப் 16, 2024 07:19 AM
சேலம் : சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கை: கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டுள்ள பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக்குழுக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில், கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.
மாவட்ட எல்லைகளில் ஈடுபடும் கண்காணிப்பு குழுக்கள், இரு திசைகளிலும், பணியை மேற்கொள்ள வேண்டும். ஒரு வாகனத்தை சோதனை செய்யும் போது, அக்குழுவை சேர்ந்த அலுவலர்கள் பிரிந்து, அடுத்து வரும் வாகனங்களையும் சோதனை செய்திட வேண்டும். ஓட்டுப்பதிவு நாள் நெருங்கி வருவதால், அனைவரும் கூடுதல் கவனத்துடன் பணியாற்ற வேண்டும். கட்டுப்பாடு அறையில் இருந்து வரும் புகார்கள் குறித்த தகவல் கிடைத்ததும், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று சோதனையிட தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.