/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
5 நாட்களுக்கு பின் நீர்மட்டம் 1 அடி சரிவு
/
5 நாட்களுக்கு பின் நீர்மட்டம் 1 அடி சரிவு
ADDED : நவ 07, 2024 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்:மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. அக்.31ல், 108.22 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நீர்வரத்து சரிவால், நவ. 1ல், 107.88 அடியாக சரிந்தது. தொடர்ந்து பருவ மழை தீவிரம் குறைய நேற்று முன்தினம் வினாடிக்கு, 10,566 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று, 9,929 கனஅடியாக சரிந்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு, 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. வரத்தை விட திறப்பு கூடுதலாக இருந்ததால், 5 நாட்களுக்கு பின் அணை நீர்மட்டம், 106.92 அடியாக சரிந்தது.