/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'வழக்கு முடிவுக்கு வந்ததும் செவிலியர் பணியிடம் நிரப்ப நடவடிக்கை'
/
'வழக்கு முடிவுக்கு வந்ததும் செவிலியர் பணியிடம் நிரப்ப நடவடிக்கை'
'வழக்கு முடிவுக்கு வந்ததும் செவிலியர் பணியிடம் நிரப்ப நடவடிக்கை'
'வழக்கு முடிவுக்கு வந்ததும் செவிலியர் பணியிடம் நிரப்ப நடவடிக்கை'
ADDED : அக் 15, 2024 07:33 AM
சேலம் : சேலம் அரசு மருத்துவமனை விழாவில் பங்கேற்ற சுகாதாரதுறை அமைச்சர் சுப்ரமணியனிடம்,அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை செவிலியர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், 'தாய், சேய் நல சிகிச்சை பிரிவில் நிரந்தர செவிலியர்கள், 295 பேருக்கு பதிலாக, 45 பேர் மட்டுமே உள்ளனர். கிரேடு 1 நர்சிங் கண்காணிப்பாளர் மூன்று பணியிடம், கடந்த ஆறு மாதங்களாக காலியாக உள்ளது. சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பயன்பாடுக்கு வந்த நாள் முதல், அதற்கான, 45 செவிலியர் பணியிடம் இதுவரை நிரப்பப்படவில்லை.
செவிலியர் பற்றாக்குறை நிலவுவதால், கூடுதல் பணிச்சுமைக்கு ஆளாகி உள்ளோம்' என, குறிப்பிட்டுள்ளனர்.மனுவை பெற்று கொண்ட அமைச்சர் சுப்ரமணியம், 'நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வந்ததும், செவிலியர்கள் பணியிடம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். முன்னதாக, மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், முடக்கவியல்துறை மருத்துவர் பணியிடம் இரண்டு ஆண்டுக்கும் மேலாக காலியாக உள்ளது. நோயாளிகளை அழைத்து செல்வதற்கான பேட்டரி கார்கள் இயக்கப்படாமல் உள்ளன. ஒன்பது லிப்ட்கள் செயல்படவில்லை. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாடுக்கு கொண்டு வரப்படவில்லை' என, அமைச்சரிடம், நமது நிருபர் எழுப்பிய கேள்விகளுக்கு, அவர் சேலம் கலெக்டரை கை காட்டிவிட்டு சென்றார்.

