/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு அனைவரும் பணிபுரிய வேண்டும்'
/
'மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு அனைவரும் பணிபுரிய வேண்டும்'
'மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு அனைவரும் பணிபுரிய வேண்டும்'
'மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு அனைவரும் பணிபுரிய வேண்டும்'
ADDED : செப் 22, 2024 05:17 AM
தாரமங்கலம்: அண்ணாதுரையின், 116வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், அ.தி.மு.க., சார்பில், தாரமங்கலத்தில் நேற்று நடந்தது. அதில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் பேசியதாவது:
அண்ணாதுரை அருமை தெரியாமல் அவரை, காஞ்சிபுரத்தில் அன்று மக்கள் தோற்கடித்தனர். அதுபோல் கடந்த ஆட்சியில் மக்களுக்கு எண்ணற்ற திட்டத்தை நிறைவேற்றிய இ.பி.எஸ்., ஆட்சியை, பொய் வாக்குறுதியை நம்பி தோற்கடித்தனர். குடும்ப அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கிறாராம். அதனால் அண்ணாதுரையை போன்று, எளிமையான இ.பி.எஸ்., தலைமையில், 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும், அ.தி.மு.க., ஆட்சி அமைக்க அனைவரும் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சங்ககிரி எம்.எல்.ஏ., சுந்தரராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், தாரமங்கலம் தெற்கு ஒன்றிய செயலர் காங்கேயன், நகர செயலர் பாலசுப்ரமணியம், மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.