ADDED : மார் 10, 2024 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி, மாசி அமாவாசையை
முன்னிட்டு, வாழப்பாடி, சிங்கிபுரம் பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில்
மயானக்கொள்ளை நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் திரளான பக்தர்கள்
கொண்டு வந்திருந்த ஆட்டுக்குட்டிகளை, அம்மன் வேடம் அணிந்த
பக்தர்கள் ஆவேசமாக பிடுங்கி கடித்து ரத்தம் குடித்தனர். பின் தலை
துண்டிக்கப்பட்ட ஆட்டுக்குட்டிகளை, பக்தர்களிடம் வழங்கினர்.
மேலும்
பக்தர்கள் தரையில் படுத்துக்கொள்ள, அம்மன் வேடமிட்டவர்,
சத்தமிட்டபடி ஆக்ரோஷமாக ஏறி மிதித்துச் சென்றனர். அங்கிருந்த
பெண்களை முறத்தால் அடித்து ஆசி வழங்கினார்.
ஆட்டுக்குட்டியின்
ரத்தத்தில் கலந்து கொடுத்த பொங்கலை, மக்கள் சாப்பிட்டனர்.
நிகழ்ச்சியால், தம்மம்பட்டி, வாழப்பாடி நெடுஞ்சாலையில்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

