/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தீபத்திருநாளை முன்னிட்டு விளக்கு தயாரிப்பு விறுவிறு
/
தீபத்திருநாளை முன்னிட்டு விளக்கு தயாரிப்பு விறுவிறு
தீபத்திருநாளை முன்னிட்டு விளக்கு தயாரிப்பு விறுவிறு
தீபத்திருநாளை முன்னிட்டு விளக்கு தயாரிப்பு விறுவிறு
ADDED : டிச 11, 2024 07:16 AM
வாழப்பாடி : கார்த்திகை தீப திருவிழா, வரும், 13ல் கொண்டாடப்பட உள்ளது. இதனால் வாழப்பாடியில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள், அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் நேற்று தீவிரம் காட்டினர். அதற்கேற்ப விற்பனையும் நடந்து வருகிறது.
இதுகுறித்து வாழப்பாடி மண்பாண்ட கலைஞர் செல்வி, 30, கூறியதாவது: பாரம்பரியமாக இத்தொழில் செய்கிறோம். சீசனுக்கு ஏற்ப மண்பாண்டங்கள் தயாரிப்பில் ஈடுபடுகிறேன். தற்போது கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கடந்த மாதம் முதல், அகல்விளக்கு தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளேன். தினமும், 1,300 விளக்குகள் தயார் செய்கிறேன். நடுவே சில நாட்களாக மழையால் விளக்கு தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டது. மொத்த விலையில், 1,000 விளக்கு கொண்ட மூட்டை, 900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தனியே விற்றால் ஒரு விளக்கு, 1 ரூபாய். சுற்றுவட்டார பகுதிகளில் தயாரிக்கப்படும் விளக்குகள் வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

