/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அ.தி.மு.க., 54ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்
/
அ.தி.மு.க., 54ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்
ADDED : அக் 18, 2025 01:01 AM
சேலம் அ.தி.மு.க.,வின், 54ம் ஆண்டு தொடக்க விழா, சேலம் மாநகர் மாவட்டம் சார்பில், நேற்று கொண்டாடப்பட்டது. அண்ணா பூங்காவில் உள்ள, முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா சிலைகளுக்கு, அமைப்பு செயலர் சிங்காரம், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சியினருக்கு இனிப்பு வழங்கினார். மாநகர் மாவட்ட செயலர் பாலு, கொள்கை பரப்பு துணை செயலர் வெங்கடாஜலம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜூ, ரவிச்சந்திரன், சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஆத்துார், கோட்டையில், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா, அண்ணாதுரை சிலைகளுக்கு, சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். நரசிங்கபுரம், செல்லியம்பாளையம், தலைவாசல், வீரகனுார், ஏத்தாப்பூர்
உள்ளிட்ட இடங்களில், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நகர செயலர் மோகன், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதம்பி உள்பட பலர் பங்கேற்றனர்.
ஓமலுார், கோட்டமேட்டுப்பட்டியில் உள்ள, சேலம் புறநகர் மாவட்ட அலுவலகம் முன், முன்னாள் எம்.எல்.ஏ., வெற்றிவேல் தலைமையில் கட்சியினர் கொண்டாடினர். அலுவலகம் முன், முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணன், கட்சி கொடி ஏற்றி, இனிப்பு வழங்கினார். மாநில ஜெ., பேரவை இணை செயலர் விக்னேஷ், ஓமலுார் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலர்கள் விமல், செந்தில்குமார் உள்ளிட்ட கட்சியினர்
பங்கேற்றனர்.பனமரத்துப்பட்டி, ஏர்வாடியில், மேற்கு ஒன்றிய செயலர் ஜெகநாதன்; பெரமனுாரில், கிழக்கு ஒன்றிய செயலர் பாலச்சந்திரன்; மல்லுாரில் நகர செயலர் பழனிவேலு தலைமையில் கட்சியினர் கொண்டாடினர்.