ADDED : ஆக 17, 2025 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலர்கள், மாவட்ட சார்பு அணி செயலர்கள் ஆலோசனை கூட்டம், நாளை காலை, 10:00 மணிக்கு, ஓமலுாரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்க உள்ளது. அதில் கட்சி வளர்ச்சி பணி, ஓட்டுச்சாவடி நிர்வாகிகள் குறித்தும், இளைஞர், இளம் பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை, விளையாட்டு அணி உறுப்பினர் சேர்க்கை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
முன்னாள் அமைச்சர் செம்மலை, ஆலோசனை வழங்குகிறார். மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன், ராஜா, ஜனனி பங்கேற்க உள்ளனர். மாவட்ட நிர்வாகி கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட சார்பு அணி செயலர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலர்கள் தவறாமல் பங்கேற்க, சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் கேட்டுக்கொண்டுள்ளார்.