/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் கைகலப்பு அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கு முன்ஜாமின்

ADDED : ஜூலை 12, 2025 01:47 AM
சேலம், சேலம் மாநகராட்சியில், கடந்த மே, 29ல் கவுன்சிலர் கூட்டம் நடந்தது. அதில் எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி பேசியபோது, அவருக்கும், தி.மு.க., கவுன்சிலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, தி.மு.க., கவுன்சிலர் சுகாசினி, யாதவமூர்த்தியை கன்னத்தில் அறைந்தார். இதுகுறித்து இருதரப்பினரும் போலீசில் புகார் அளித்தனர்.
யாதவமூர்த்தி புகாரில், 7 தி.மு.க., கவுன்சிலர்கள் மீதும், சுகாசினி புகாரில், யாதவமூர்த்தி, கொறடா செல்வராஜ், வரதராஜ், சசிகலா, மோகனப்பிரியா ஆகிய, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மீதும் வழக்கு தொடுத்தனர். இதில் பெண் மீதான வன்கொடுமை சட்டத்தில், அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு பதிந்ததால் கைதாகும் சூழல் ஏற்பட்டது.
இதை தவிர்க்க, 5 பேரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தனர். அதில், சேலம் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் சரண் அடைந்து, முன்ஜாமின் பெற்றுக்கொள்ள, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று, சேலம் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் யாதவமூர்த்தி, செல்வராஜ், வரதராஜ், மோகனப்பிரியா ஆகியோர் ஆஜராகி, முன்ஜாமின் பெற்றனர்.