/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜன 28, 2025 07:15 AM
கெங்கவல்லி: தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி பேரூர் மற்றும் கெங்கவல்லி ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம், நேற்று தம்மம்பட்டியில், கெங்கவல்லி எம்.எல்.ஏ., நல்லதம்பி தலைமையில் நடந்தது.
இதில், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது: 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளது. பொங்கல் பொருட்கள் வழங்காதது, நிறைவேற்றாத வாக்குறுதிகள் குறித்து, மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். கெங்கவல்லி தொகுதியில், 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில், அ.தி.மு.க., தொடர்ந்து வெற்றி பெற வைக்க, கட்சியினர் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அ.தி.மு.க., மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதால், இ.பி.எஸ்., முதல்வராக வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு பேசினார். ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், கெங்கவல்லி மேற்கு ஒன்றிய செயலர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

