/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று அ.தி.மு.க., பொதுக்கூட்டம் இ.பி.எஸ்., பங்கேற்பால் அழைப்பு
/
இன்று அ.தி.மு.க., பொதுக்கூட்டம் இ.பி.எஸ்., பங்கேற்பால் அழைப்பு
இன்று அ.தி.மு.க., பொதுக்கூட்டம் இ.பி.எஸ்., பங்கேற்பால் அழைப்பு
இன்று அ.தி.மு.க., பொதுக்கூட்டம் இ.பி.எஸ்., பங்கேற்பால் அழைப்பு
ADDED : நவ 08, 2025 05:08 AM
ஆத்துார்:ஓமலுாரில்
இன்று நடக்கும், அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில், பொதுச்செயலர்
இ.பி.எஸ்., பேசுவதால், கட்சியினர் பங்கேற்க, அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் அறிக்கை:
அ.தி.மு.க.,வின்,
54ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சேலம் புறநகர் மாவட்டம் சார்பில்,
ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே, நவ., 8(இன்று) மாலை, 5:00 மணிக்கு,
பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. அதில், பொதுச்செயலர், இ.பி.எஸ்.,
பேசுகிறார். அதனால், இன்னாள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள்,
மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், நகர, பேரூர், ஒன்றிய
நிர்வாகிகள், மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு உள்ளிட்ட
நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்க அழைக்கிறோம்.