/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'லஞ்சம் நிறைந்த மாநகராட்சி' அ.தி.மு.க., பொறுப்பாளர் குற்றச்சாட்டு
/
'லஞ்சம் நிறைந்த மாநகராட்சி' அ.தி.மு.க., பொறுப்பாளர் குற்றச்சாட்டு
'லஞ்சம் நிறைந்த மாநகராட்சி' அ.தி.மு.க., பொறுப்பாளர் குற்றச்சாட்டு
'லஞ்சம் நிறைந்த மாநகராட்சி' அ.தி.மு.க., பொறுப்பாளர் குற்றச்சாட்டு
ADDED : மே 02, 2025 02:20 AM
சேலம்:
சேலம் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில், மே தின பொதுக்கூட்டம், சாமிநாதபுரத்தில் நேற்று நடந்தது. செயலர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். அதில் அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்.,சின், 71வது பிறந்தநாளை முன்னிட்டு, தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் ரத்த தான முகாம் நடத்துவதற்கான துண்டுபிரசுரத்தை வெளியிட்டனர்.
முன்னதாக, அ.தி.மு.க.,வின், மாநகர் பொறுப்பாளர் செல்வராஜ் பேசுகையில், ''சேலம் மாநகராட்சியில் கட்டடம் கட்ட அனுமதிக்கு, பல லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் கிடைக்கிறது. லஞ்சம் நிறைந்த மாநகராட்சியாக மாறிவிட்டது. மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,'' என்றார்.
தெற்கு தொகுதி, எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடாஜலம், மாநகர் பொறுப்பாளர் பாலு, நாவலுார் முத்து, தலைமை பேச்சாளர் மாறன் உள்ளிட்டோர் பேசினர். சூரமங்கலம் பகுதி செயலர் மாரியப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொழிற்சங்க நிர்வாகிகள், பகுதி செயலர்கள் பங்கேற்றனர்.
'கல்லா கட்டும் வேலை'
வாழப்பாடியில், சேலம் புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசுகையில், ''வங்கி ஊழியர்கள் கடன் கேட்டு தரக்குறைவாக பேசியதால், துக்கியாம்பாளையம் விவசாயி தற்கொலை செய்துகொண்டார். வாழப்பாடியில் ஆளுங்கட்சியினர், 750 சந்துக்கடைகள் நடத்துகின்றனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. வாழப்பாடி டவுன் பஞ்சாயத்தில் உள்ள செயல் அலுவலர், நகர செயலர் முதல் அமைச்சர் வரை, 'கல்லா' கட்டும் வேலையை செய்கிறார்,'' என்றார். தொடர்ந்து, தலைமை பேச்சாளர் குலோப்ஜான் உள்பட பலர் பேசினர்.