/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலி வாரிசு சான்றிதழை ரத்து செய்யக்கோரி அ.தி.மு.க.,பிரமுகர் மனைவி கலெக்டரிடம் மனு

ADDED : ஜூலை 29, 2025 01:09 AM
சேலம், போலியாக வழங்கிய வாரிசு சான்றிதழை ரத்து செய்யக்கோரி, கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட அ.தி.மு.க., பகுதி செயலர் சண்முகத்தின் மனைவி, கலெக்டரிடம் மனு அளித்தார்.
இது குறித்து, சேலம் தாதகாப்பட்டி காமராஜ் நகரை சேர்ந்த பரமேஸ்வரி, 50, கூறியதாவது: அ.தி.மு.க.,வில், கொண்டலாம்பட்டி பகுதி செயலராக இருந்த என் கணவர் சண்முகம், கடந்தாண்டு ஜூலையில் கொலை
செய்யப்பட்டார். இதையடுத்து என் மகள் சுகன்யா, மகன் கவிச்சரண் பெயர்களுடன் வாரிசு சான்று கேட்டு, வி.ஏ.ஓ.,விடம் விண்ணப்பித்த போது, இதில் புகார் உள்ளதாக கூறி நிராகரித்து
விட்டார்.
இந்நிலையில், என் கணவர் சண்முகத்தின் வாரிசுகளாக அவரின் தந்தை, தாய் பெயர்களை சேர்க்காமல், முதல் மனைவி என்று என் பெயர் மற்றும் எனது மகள், மகன் பெயர்களோடு, இரண்டாவது மனைவி, அவரது மகன் பெயர்களோடு போலியாக வாரிசு சான்றிதழ் எங்களுக்கு தெரியாமல் வழங்கியுள்ளனர். என் கணவர் சண்முகம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அவரின் வேட்பு மனுக்களில் மனைவி என, என் பெயரை மட்டும் தான் குறிப்பிட்டுள்ளார். கணவரின் உடலை அரசு மருத்துவமனையில், மனைவி என கையெழுத்திட்டு நான் தான் பெற்று வந்தேன்.
எனவே, என் கணவரின் பெயரில் எனக்கு தெரியாத நபர்களை, வாரிசுகளாக சேர்த்து வழங்கிய சான்றிதழை ரத்து செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.