/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., - எம்.பி., மீது அ.தி.மு.க.,வினர் புகார்
/
தி.மு.க., - எம்.பி., மீது அ.தி.மு.க.,வினர் புகார்
ADDED : நவ 27, 2025 02:13 AM
சேலம், அ.தி.மு.க.,வை சேர்ந்த வீரபாண்டி தொகுதி, எம்.எல்.ஏ., ராஜமுத்து தலைமையில், இடைப்பாடியை சேர்ந்த, ஓட்டுச்சாவடி முகவர் முனிக்குமாரி, சேலம் கலெக்டர் பிருந்தாதேவியிடம், நேற்று அளித்த மனு:
தி.மு.க.,வை சேர்ந்த, சேலம் எம்.பி., செல்வகணபதி, நேற்று முன்தினம் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தி.மு.க.,வை சேர்ந்த ஓட்டுச்சாவடி முகவர்கள், பி.டி.ஓ.,க்கள் பாலச்சந்திரன், செல்வகுமாரை அழைத்து, சித்துார் ஊராட்சி அலுவலகத்தில் கூட்டம் நடத்தினார். அதில், தி.மு.க., ஆதரவு அல்லாத வாக்காளர்களை, எஸ்.ஐ.ஆரில் இருந்து எவ்வாறு புறக்கணிப்பது, அவர்களுக்கு எதிராக புகார் மனு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தகுதியான வாக்காளராக இருந்தும், தி.மு.க., எதிர்ப்பாளர் என்றால், அவர்களை நீக்க, அனைத்து வழிமுறைகளை கையாள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது, முற்றிலும் சட்ட விரோதம். இதுகுறித்து இதர கட்சி முகவர்களுக்கு தகவல் தெரிவிக்காமல், தி.மு.க.,வை சேர்ந்த, ஊராட்சி முன்னாள் தலைவர்கள், ஊராட்சி செயலர்களை வைத்து கூட்டம் நடத்தியிருப்பது, ஜனநாயகத்தை கேலி செய்வதோடு, தேர்தல் கமிஷனின் சுயாட்சி மற்றும் மரபு நடைமுறைகளுக்கு பங்கம் விளைவித்துள்ளது.
அதனால் தேர்தல் செயல் முறையில், ஆளுங்கட்சி தலையீட்டை தடுத்து, ஜனநாயகத்தை காக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

