/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
. கறுப்பு பட்டை அணிந்து விவசாயிகள் தர்ணா
/
. கறுப்பு பட்டை அணிந்து விவசாயிகள் தர்ணா
ADDED : நவ 27, 2025 02:13 AM
ஆத்துார், ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பு சார்பில், ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் முன், கறுப்பு பட்டை அணிந்தபடி தர்ணா நேற்று நடந்தது. ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் சங்கரய்யா தலைமை வகித்தார். அதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் இந்திரஜித், கோரிக்கைகள் குறித்து பேசினார்.
குறிப்பாக, 2021ல், டில்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுதல்; விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுதல்; மின் கட்டண திருத்த மசோதாவை கைவிடுதல்; வேளாண் விளை பொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் செல்வராஜ், தலைவர் அன்பழகன், ஐக்கிய விவசாயிகள் சங்க பொதுச்செயலர் கோவிந்தன் உள்பட பல்வேறு விவசாய அமைப்பினர்
பங்கேற்றனர்.

