/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலி செயலியை பதிவிறக்கி ரூ.10 லட்சம் இழந்த இன்ஜினியர்
/
போலி செயலியை பதிவிறக்கி ரூ.10 லட்சம் இழந்த இன்ஜினியர்
போலி செயலியை பதிவிறக்கி ரூ.10 லட்சம் இழந்த இன்ஜினியர்
போலி செயலியை பதிவிறக்கி ரூ.10 லட்சம் இழந்த இன்ஜினியர்
ADDED : நவ 27, 2025 02:13 AM
சேலம், இளம்பிள்ளையை சேர்ந்த, 33 வயது பெண் இன்ஜினியரின் மொபைல் போனுக்கு, 4 நாட்களுக்கு முன், 'ஆர்.டி.ஓ., ஏ.பி.கே.,' பெயரில், போக்குவரத்து விதிமீறல் என போலி மொபைல் செயலி வந்துள்ளது.
அதை அவர் பதிவிறக்கியதும், அவரது மொபைல் போனுக்கு, பல்வேறு ஓ.டி.பி., எண்கள் வந்தன. தொடர்ந்து, அவரது வங்கி கணக்கில், 10.78 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாக, குறுந்தகவல் வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், மாவட்ட சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'அடையாளம் தெரியாதவர்கள், புது எண்களில் இருந்து போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் என்ற பெயரில் போலியாக, 'ஆர்.டி.ஓ., ஏ.பி.கே'., என்ற செயலி வந்தால் யாரும் பதிவிறக்க வேண்டாம். மோசடி நபர்கள் இதுபோன்று அனுப்பி வங்கி கணக்கில் இருந்து பணம் பறிக்கின்றனர். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்றனர்.