/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொல்லையால் பெண் தீக்குளிப்பு மாமனார் கைது; கணவருக்கு வலை
/
தொல்லையால் பெண் தீக்குளிப்பு மாமனார் கைது; கணவருக்கு வலை
தொல்லையால் பெண் தீக்குளிப்பு மாமனார் கைது; கணவருக்கு வலை
தொல்லையால் பெண் தீக்குளிப்பு மாமனார் கைது; கணவருக்கு வலை
ADDED : நவ 27, 2025 02:12 AM
இடைப்பாடி, மாமனார், பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்க முயன்றதால் வேதனை அடைந்த மருமகள், தீக்குளித்தார். மாமனாரை கைது செய்த போலீசார், புகார் அளிக்க வேண்டாம் என மறுத்த கணவரை தேடுகின்றனர்.
இடைப்பாடி அருகே இருப்பாளியை சேர்ந்தவர் காசி, 55. இவரது மகன் சந்தோஷ், 24. தந்தை, மகன் ஆகியோர், வெப்படையில் உள்ள தனியார் மில்லில் பணிபுரிகின்றனர். சந்தோஷ், 3 ஆண்டுக்கு முன், சங்ககிரி ஆர்.எஸ்., பகுதியை சேர்ந்த திவ்யா, 24, என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு, ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவர்கள், காசி ஆகியோர் கூட்டுக்குடும்பமாக வசித்தனர்.
கடந்த, 22ல், சந்தோஷ் வேலைக்கு சென்ற நிலையில், காசி, மருமகள் திவ்யா கையைப்பிடித்து இழுத்து, ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்தியுள்ளார். அதிர்ச்சி அடைந்த திவ்யா, மாமனாரை தள்ளி விட்டு, மொபைல் போன் மூலம் கணவரிடம் தெரிவித்துள்ளார். மறுநாள் சந்தோஷிடம், காசி குறித்து போலீசில் புகார் கொடுக்கிறேன் என திவ்யா கூறியுள்ளார். அதற்கு சந்தோஷ் மறுத்ததோடு, திவ்யா கன்னத்தில் அடித்துள்ளார்.
மனமுடைந்த திவ்யா, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு, இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பூலாம்பட்டி போலீசார், காசியை நேற்று முன்தினம் கைது செய்தனர். புகார் கொடுக்கக்கூடாது எனக்கூறி சம்பவத்தை கண்டுகொள்ளாத சந்தோஷ் மீதும் வழக்குப்பதிந்த போலீசார், அவரை தேடுகின்றனர்.

