/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஒருதலைபட்சமாக செயல்படும் பி.எல்.ஓ., கலெக்டரிடம் அ.தி.மு.க.,வினர் புகார்
/
ஒருதலைபட்சமாக செயல்படும் பி.எல்.ஓ., கலெக்டரிடம் அ.தி.மு.க.,வினர் புகார்
ஒருதலைபட்சமாக செயல்படும் பி.எல்.ஓ., கலெக்டரிடம் அ.தி.மு.க.,வினர் புகார்
ஒருதலைபட்சமாக செயல்படும் பி.எல்.ஓ., கலெக்டரிடம் அ.தி.மு.க.,வினர் புகார்
ADDED : நவ 07, 2025 01:07 AM
சேலம், அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், மாநகர மாவட்ட செயலர் பாலு உள்ளிட்ட நிர்வாகிகள், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, கலெக்டர் பிருந்தாதேவியிடம் அளித்த புகார் மனு:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடக்கிறது. பி.எல்.ஓ.,க்கள் மூலம், வாக்காளர் விபரங்களை பூர்த்தி செய்வதற்கான படிவம் வழங்கி, அவர்கள் மூலமே பெற தேர்தல் கமிஷன் உத்தரவிட்ட நிலையில், சில இடங்களில் ஆளுங்கட்சியை சேர்ந்த ஓட்டுச்சாவடி முகவர்களிடம் இருந்து, பி.எல்.ஓ.,க்கள், படிவங்களை பெறுகின்றனர். இதனால் முறைகேடுக்கு வாய்ப்புள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் இன்னும் படிவங்கள் வழங்கப்படாமல் உள்ளன.
இப்பணியில் ஈடுபடும், பி.எல்.ஓ.,க்களுக்கு போதிய அவகாசம் வழங்க வேண்டும். சில இடங்களில், பி.எல்.ஓ.,க்கள் விண்ணப்ப படிவம் வழங்கச் செல்லும்போது, தி.மு.க.,வை சேர்ந்த ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு மட்டும் தகவல் தெரிவிக்கின்றனர். எதிர்க்கட்சி முகவர்களுக்கு தகவல் தெரிவிக்காமல், ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ.,க்கள், வீரபாண்டி ராஜமுத்து, ஓமலுார் மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
'காங்., கட்சிக்கு
அழைப்பு இல்லை'
ஆத்துார் நகராட்சி, 26வது வார்டு கவுன்சிலர் தேவேந்திரன், நேற்று, ஆத்துார் ஆர்.டி.ஓ., தமிழ்மணியிடம் அளித்த புகார் மனு: ஆத்துார் சட்டசபை தொகுதியில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பாக முகவர்களுடன் சென்று, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மேற்கொள்கின்றனர். இப்பணியில், காங்., கட்சியை சேர்ந்த, ஓட்டுச்சாவடி பாக முகவர்களை அழைத்துச்செல்லவில்லை. காங்., கட்சியினருக்கு இதுதொடர்பாக தகவலும் வழங்கவில்லை. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆய்வு
சேலம் தெற்கு தொகுதியில், நாராயண நகர், சின்ன மாரியம்மன் கோவில் தெரு பகுதி களில், படிவங்கள் வழங்கும் பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார். அதேபோல் கலெக்டர் பிருந்தாதேவி, சேலம் வடக்கு உள்ளிட்ட தொகுதிகளில் ஆய்வு செய்தார்.
மலை ஏறிய கலெக்டர்
நங்கவள்ளி அருகே, 5 கி.மீ.,ல், வேட்ராய பெருமாள் கோவில், சிறு மலை உச்சியில் உள்ளது. மாலை, கலெக்டர் பிருந்தாதேவி, டி.ஆர்.ஓ., ரவிக்குமார், உள்ளிட்ட அதிகாரிகள், அடிவாரத்தில் கார்களை நிறுத்திவிட்டு, மலையேற்ற பயிற்சியில், 2 கி.மீ., ஏறி, அங்குள்ள பெருமாள் கோவிலை ஆய்வு செய்தனர். மலைப்பாதை அமைக்க, ஆய்வு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

