/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 12, 2025 12:49 AM
ஏற்காடு :ஏற்காடு மலைவாழ் பழங்குடியின மக்களை பழிவாங்கும் நோக்கோடு, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல், அரசு வழங்கும் சலுகைகளை வழங்க மறுக்கும், தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், ஒண்டிக்கடை ரவுண்டானாவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்து பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில், 110 கோடி ரூபாயில், மஞ்சக்குட்டையில் கூட்டுறவு பயிற்சி மையம் அமைக்க நிதி ஒதுக்கி, 10 கோடி ரூபாய் செலவிட்ட பின், தி.மு.க., அரசு, அதை கொடைக்கானலுக்கு கொண்டு சென்றுவிட்டது. தி.மு.க., ஆட்சி வந்தது முதல், ஏற்காட்டில் அதிக அளவில் மரங்கள் வெட்டி கடத்தப்படுகின்றன. அ.தி.மு.க., ஆட்சியில், ஏற்காடு மலைக்கிராமங்களுக்கு எண்ணற்ற சாலை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. தி.மு.க., வந்தது முதல், மலைக்கிராமத்தை புறக்கணிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
ஏற்காடு எம்.எல்.ஏ., சித்ரா பேசுகையில், ''பல்வேறு மலை கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தர, அ.தி.மு.க., ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அச்சாலைகளை போடாமல் கிடப்பில் போட்டுவிட்டன,'' என்றார்.
எம்.பி., சந்திரசேகரன், எம்.எல்.ஏ.,க்கள் ஜெயசங்கரன், நல்லதம்பி, ராஜமுத்து, ஒன்றிய செயலர்கள் சதீஷ்குமார், ராஜசேகரன், மணி, மோகன், அண்ணாதுரை, மாவட்ட செயலர்கள், மகளிரணி லலிதா, தகவல் தொழில்நுட்பம் ஜெயகாந்தன், இளைஞரணி செயலர் அருண் உள்பட பலர் பங்கேற்றனர்.