/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'அவுட்சோர்ஸிங்' கைவிட ஏ.ஐ.டி.யு.சி., வலியுறுத்தல்
/
'அவுட்சோர்ஸிங்' கைவிட ஏ.ஐ.டி.யு.சி., வலியுறுத்தல்
ADDED : அக் 09, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், அரசு, தனியார் நிறுவனங்களில், 'அவுட்சோர்ஸிங்' முறையை கைவிடுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று, ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொதுச்செயலர் சம்பத் தலைமை வகித்தார்.
அதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்ற வாக்குறுதியை, தமிழக அரசு நிறைவேற்றுதல்; மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியம் உள்ளிட்ட முத்தரப்பு குழுக்களின் கூட்டத்தை முறையாக கூட்டுதல்; புலம் பெயர் தொழிலாளர் சட்டத்தை செயல்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இ.கம்யூ., மாவட்ட செயலர் மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.