/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏ.கே.வி., பப்ளிக் பள்ளி பொதுத்தேர்வில் சாதனை
/
ஏ.கே.வி., பப்ளிக் பள்ளி பொதுத்தேர்வில் சாதனை
ADDED : மே 15, 2025 01:31 AM
நாமக்கல் நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஏ.கே.வி., பப்ளிக் பள்ளி, பத்து, பிளஸ் 2 சி.பி.எஸ்.இ., தேர்வில் சிறப்பிடம் பிடித்துள்ளது. மாணவர் அபினவ், 500க்கு, 489 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவி பிரணீதா, 483 மதிப்பெண் பெற்று, 2ம் இடம்; மாணவி தாரணிகா, 482 மதிப்பெண் பெற்று, 3ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இதேபோல், பிளஸ் 2 சி.பி.எஸ்.இ., தேர்வில் மாணவர் நவீன், 487 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம்; மாணவர் ஹரிஹர சுப்ரமணியன், 486 மதிப்பெண் பெற்று, 2ம் இடம்; மாணவர்கள் பிரணவ், சுஹாஷினி, ருத்ரா ஆகிய மூவர், 471 மதிப்பெண் பெற்று, மூன்றாமிடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
சாதனை புரிந்த மாணவ, மாணவியரை, பள்ளி தலைவர் ஆறுமுகம், தாளாளர் முத்துசாமி, செயலாளர் குழந்தைவேலு, பொருளாளர் பழனிசாமி, கல்லுாரி முதல்வர் பழனிவேல், மற்றும் இருபால் ஆசிரியர்கள் பாராட்டினர். மேலும், பிளஸ் 1 வகுப்பில் நீட், ஜே.இ.இ., நீட் ரிப்பீடர்ஸ் பிரிவில் தனித்தனியாக மாணவர் சேர்க்கை நடக்கிறது என, அதன் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.