/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அழகிரிநாதர் கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா; முகூர்த்த கம்பம் நடல்
/
அழகிரிநாதர் கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா; முகூர்த்த கம்பம் நடல்
அழகிரிநாதர் கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா; முகூர்த்த கம்பம் நடல்
அழகிரிநாதர் கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா; முகூர்த்த கம்பம் நடல்
ADDED : மே 13, 2025 02:28 AM
சேலம் :கோட்டை அழகிரிநாதர் கோவில் தேர் திருவிழாவையொட்டி,நேற்று முகூர்த்த கம்பம் நடப்பட்டது.
சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவில் கும்பாபிேஷகம் கடந்த ஏப்.. 20ல் நடந்தது. வைகாசி பிரம்மோற்சவ விழாவையொட்டி, 48 நாட்கள் நடக்கும் மண்டல பூஜை, 24 நாட்களாக குறைக்கப்பட்டு மே 14ல் நிறைவடைகிறது. வைகாசி பிரம்மோற்சவ தேர் திருவிழாவுக்கான முகூர்த்த கம்பம் நடும் நிகழ்ச்சி நேற்று காலை, 6:00 மணிக்கு தேர்வீதி ராஜகணபதி கோவில் எதிரில் உள்ள தேர் மண்டபத்தில் நடந்தது. சுதர்சன் பட்டாச்சாரியார் முகூர்த்த கம்பத்துக்கு அபிேஷகம் செய்து, மஞ்சள், குங்குமம், சந்தனம் பூசி மலர்களால் அலங்கரித்து மேள தாளங்கள் முழங்க நடப்பட்டது.
கம்பத்துக்கு நவ தானியங்கள் மற்றும் பால் ஊற்றி கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் வழிபட்டனர். ஜூன் 1ல் பிரம்மோற்சவ விழா துவங்கி, 13 வரை தினசரி பெருமாள் விதவிதமான வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
ஜூன் 2 கொடியேற்றம், முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் ஜூன் 10 காலை 8:30 மணிக்கு நடக்கிறது. ஏற்பாடுகளை வெங்கடேஸ்வரி சரவணன் தலைமையிலான அறங்காவலர் குழுவினர், கோவில் பட்டாச்சாரியார்கள், கட்டளை உற்சவதாரர்கள் செய்து வருகின்றனர்.