/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாராய ஊறல் அழிப்பு முதியருக்கு 'காப்பு'
/
சாராய ஊறல் அழிப்பு முதியருக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 05, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், ஓமலுார் அருகே நாரணம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 64. இவரது குடிசை வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில், இரும்பாலை மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.
அப்போது, 3 பானைகளில் சாராய ஊறல் போடப்பட்டிருந்ததை கண்டு
பிடித்து அழித்தனர். சாராயம் தயாரிக்க வைத்திருந்த மூலப்பொருட்கள், 5 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி, ஆறுமுகத்தை கைது செய்தனர்.