ADDED : பிப் 19, 2025 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: சேலம் எஸ்.பி., கவுதம் கோயல், நேற்று முன்தினம், ஆத்துார், வளையமாதேவி, தலைவாசல், நரசிங்கபுரம், மஞ்சினி உள்ளிட்ட பகுதிகளில், டாஸ்மாக் கடை எதிரே ஆய்வு செய்தார். தொடர்ந்து அப்பகுதிகளில் அனுமதியின்றி செயல்படும் கடைகளை அகற்ற உத்தரவிட்டார்.
இதுகுறித்து நேற்று, எஸ்.பி., கவுதம் கோயல் கூறுகையில், ''சேலம் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட, 24 பார்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. டாஸ்மாக் எதிரே பெட்டிக்கடை வைத்து மது அருந்த அனுமதித்தது, கடை இயங்காத நேரத்தில் மது விற்றது உள்பட, 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த, 4 முதல், இன்று(நேற்று) வரை, மதுபாட்டில் விற்ற, 178 பேரை கைது செய்துள்ளோம்,'' என்றார்.

