/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'ஆத்துாரில் சாராயம், சந்துக்கடையில் மது விற்பனை கட்டுப்படுத்தப்படும்'

ADDED : பிப் 18, 2025 07:16 AM
ஆத்துார்: ஆத்துார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று மாலை சேலம் எஸ்.பி., கவுதம்கோயல் ஆய்வு செய்தார்.
குழந்தை திருமணம், போக்சோ, பெண்களுக்கு எதிரான குற்-றங்கள், மகளிர் பள்ளி, கல்லுாரி பகுதியில் ரோந்து பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, ஆத்துார் டவுன், தலைவாசல் பகுதியில் ஆய்வு செய்தார்.அப்போது, எஸ்.பி., கவுதம்கோயல் நிருபர்களிடம் கூறுகையில், ''கெங்கவல்லியில் உள்ள ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் நிலையில் உள்ள ஸ்டேஷனாக தரம் உயர்த்துவதற்கு, அறிக்கை பெறப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். மகளிர் பள்ளி,
கல்லுாரி பகுதிகளில், ரோந்து பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்-டத்தில், சாராயம், சந்துக்கடைகளில் மது விற்பனை கட்டுப்ப-டுத்தும் பணிகள் நடந்து வருகிறது. காட்டுக்கோட்டை புறக்-காவல் நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்,'' என்றார்.