/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'அனைத்து கட்சிக்கும் மது ஒழிப்பில் உடன்பாடு ஆனால் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது ஏன்?'
/
'அனைத்து கட்சிக்கும் மது ஒழிப்பில் உடன்பாடு ஆனால் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது ஏன்?'
'அனைத்து கட்சிக்கும் மது ஒழிப்பில் உடன்பாடு ஆனால் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது ஏன்?'
'அனைத்து கட்சிக்கும் மது ஒழிப்பில் உடன்பாடு ஆனால் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது ஏன்?'
ADDED : செப் 19, 2024 07:56 AM
சேலம்: ''அனைத்து கட்சிகளுக்கும் மது ஒழிப்பதில் உடன்பாடு இருக்கிறது. ஆனால் மதுக்கடைகள் ஏன் திறக்கப்பட்டுள்ளது. திசை திருப்பப்படுகின்றன,'' என, வி.சி., தலைவர் திருமாவளவன் பேசினார்.
வி.சி., கட்சி சார்பில், அக்., 2ல் உளுந்துார்பேட்டையில் மது, போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடக்க உள்ளது. இதுகுறித்து, மேற்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. அதில்,
அக்கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:கூட்டணியில் இருந்தால் எதிர்த்து பேசக்கூடாது என்பது உங்களின் பார்வையாக இருக்கலாம். கள்ளக்குறிச்சி சாவு குறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினால் கூட்டணியில் சர்ச்சை வரும் என எனக்கு யோசிக்க தெரியாதா?
மக்கள் நலனே பிரதானம். அந்த அடிப்படையில்தான் முடிவு எடுக்கிறோம். பகைவர்கள், இதை சாக்காக பயன்படுத்தி விரிசலை ஏற்படுத்த முயற்சிப்பார்கள் என தெரியும். அதற்கு மாநாட்டை நடத்தாமல் இருக்க
முடியாது. நாடு தழுவிய பிரச்னையாக, இதை மாற்றும் தேவை உள்ளது. எந்த கூட்டணியில் இருந்தாலும் கை குலுக்கி கொள்ளும் கலாசாரம் இங்கு இல்லை. அரசியல் முதிர்ச்சி இருந்தால் என்ன தவறு?தி.மு.க.,- அ.தி.மு.க.,- காங்.,- கம்யூ.,- பா.ம.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் மது ஒழிப்பதில் உடன்பாடு இருக்கிறது. எல்லோரும் ஆதரிக்கிறோம். ஆனால் மதுக்கடைகள் ஏன் திறக்கப்பட்டுள்ளன; திசை
திருப்பப்படுகின்றன.தி.மு.க., வேறு. தமிழக அரசு வேறு. எங்கள் கொள்கையில், தி.மு.க.,வும் உடன்படுகிறது. பங்கேற்று பேசுவதாக உறுதி அளித்துள்ளனர். தமிழக அரசை பொறுத்தவரை, படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைத்தால்
மட்டும் போதாது. உற்பத்தி, விற்பனை இலக்குகளை குறைத்து கொண்டே வர வேண்டும் என்பதே கோரிக்கை. மதுவில் வரும் வருமானத்தை வைத்து மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து சித்த மருத்துவர் சிவராமன், பொதுச்செயலர் செந்தமிழ்செல்வன், எம்.பி., ரவிக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.கூட்டத்தில் பலரும் மாநாட்டுக்கு நிதி வழங்கினர். இதில் கடந்த ஆண்டு, பல பெண்களிடம், 25 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததால், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்ற காயத்ரி,
அதிகபட்சமாக, 10 லட்சம் ரூபாய் வழங்கினார். அவருக்கு மேடையில் இருக்கை அளித்து அமர வையுங்கள் என, திருமாவளவன் தெரிவித்தார்.

