/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.10 கோடியில் சீரமைப்பு நிறைவு அல்லிக்குட்டை ஏரி புதுப்பொலிவு
/
ரூ.10 கோடியில் சீரமைப்பு நிறைவு அல்லிக்குட்டை ஏரி புதுப்பொலிவு
ரூ.10 கோடியில் சீரமைப்பு நிறைவு அல்லிக்குட்டை ஏரி புதுப்பொலிவு
ரூ.10 கோடியில் சீரமைப்பு நிறைவு அல்லிக்குட்டை ஏரி புதுப்பொலிவு
ADDED : நவ 22, 2024 01:33 AM
ரூ.10 கோடியில் சீரமைப்பு நிறைவு
அல்லிக்குட்டை ஏரி புதுப்பொலிவு
சேலம், நவ. 22-
சேலம், அம்மாபேட்டை மண்டலத்தில் உள்ள அல்லிக்குட்டை ஏரி, 23.65 ஏக்கர் பரப்பு கொண்டவை. அங்கு, 10 கோடி ரூபாயில் சீரமைப்பு பணி, கடந்த ஆண்டு தொடங்கியது. பூங்கா சீரமைக்கப்பட்டு ஏரி கரைகள் பலப்படுத்தப்பட்டன. மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள, 'பேவர் பிளாக்' கற்கள் பதிக்கப்பட்டு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏற்படாதபடி, நடைபாதை இருபுறமும் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு, மின் விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாட தனி பூங்கா வசதியும், அதில் பல்வேறு விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர், ஏரியில் கலக்காமல் இருக்க தனி கால்வாய், ஏரியில் தேங்கிய நீரை சுத்தப்படுத்துவதற்கு, கரையில், 'ஏரியேட்டர்' அமைப்பு ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏரியில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்கு அழகான சூழல் உருவாகியுள்ளது. இன்னும் சிறு சிறு பணி மட்டுமே செய்ய வேண்டியிருப்பதால் சில நாட்களில், மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.