/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முன்னாள் மாணவர்கள் பொன்விழா ஆண்டு சந்திப்பு
/
முன்னாள் மாணவர்கள் பொன்விழா ஆண்டு சந்திப்பு
ADDED : ஆக 25, 2025 03:14 AM
பனமரத்துப்பட்டி: மல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், 1975ம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்களின் பொன் விழா ஆண்டு சந்திப்பு நேற்று நடந்தது. முன்னாள் மாணவர் சங்க தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார்.
தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் கலந்துரையாடல் நடந்தது. அதில் பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.மேலும் பள்ளி கழிப்பிடத்தை, 2 லட்சம் ரூபாய் மதிப்பில் முன்னாள் மாணவர்கள் புதுப்பித்தனர். அதை, சங்க செயலர் விஜயகுமார் திறந்து வைத்தார். மேலும், பள்ளி வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்வதாக தெரிவித்தனர். பொருளாளர் முரளிதரன், இணை செயலர் செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமான முன்னாள் மாணவர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.