/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பட்டாசு கேட்டு ரூ.25,000 அனுப்பிய புகார் ரூ.45 லட்சம் மோசடி செய்தது அம்பலம்

ADDED : டிச 10, 2025 11:03 AM
சேலம்: மேட்டூரை சேர்ந்த கொத்தனார் ஒருவர், கடந்த தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வாங்க, அவரது முகநுாலில் வெளிவந்த விளம்பர நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசி, 25,000 ரூபாய் அனுப்-பினார்.
ஆனால் பட்டாசு கிடைக்கவில்லை. ஏமாற்றப்-பட்டதை உணர்ந்த அவர், சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இதே போன்று பட்டாசு விற்-பனை பெயரில் மோசடி நடந்தது தெரியவந்துள்-ளது. அதில் திருப்பத்துார் மாவட்ட சைபர் கிரைம் போலீசார், வாணியம்பாடியை சேர்ந்த கிேஷார் குமார், விக்கேஷ், பொன்முடி ஆகியோரை கைது செய்து, அவர்களது முக்கிய கூட்டாளியான முரு-கனை தேடி வருவதும் தெரிந்தது.இதையடுத்து சேலம் சைபர் கிரைம் போலீசார், கைதான, 3 பேரையும், ஒருநாள் நீதிமன்ற காவலில் எடுத்து நேற்று முன்தினம் விசாரித்-தனர். அதில் முருகனுடன் சேர்ந்து, 45 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்-டது. பின் மூவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். முருகனை தேடும் பணி தொடர்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.