/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பராசக்தி அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா
/
பராசக்தி அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா
ADDED : ஏப் 29, 2025 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி:
மல்லுார் மாரியம்மன் சித்திரை திருவிழா, கடந்த 17ல், தொடங்கியது. தினமும் இரவில், மாரியம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது. நாளை, பொங்கல் வைத்தல், மே, 1ல், வண்டி வேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
நேற்று முன்தினம் வன்னியர் சமூக மக்கள் சார்பில், மாரியம்மனுக்கு அபி ேஷகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு, பராசக்தி அலங்காரத்தில், டிராக்டரில் ஊரின் முக்கிய வீதி வழியாக மாரியம்மன் மெரமனை திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சங்க தலைவர் கோபால், செயலர் சுந்தர்ராஜன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.