/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளத்தில் பாய்ந்த கார் 8 வயது சிறுமி பலி
/
பள்ளத்தில் பாய்ந்த கார் 8 வயது சிறுமி பலி
ADDED : அக் 14, 2024 04:58 AM
ஏற்காடு: சென்னை, ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் மாரிசாமி. இவர் மனைவி, மகன், மகள் ஜனார்த்தினி, 8, ஆகியோருடன், 'மகேந்திரா டியூவி - 300' காரில் ஏற்காடுக்கு சுற்றுலா வந்தார். சுற்றிப்பார்த்து விட்டு நேற்று மதியம் குப்பனுார் மலைப்பாதை வழியே சென்னை புறப்-பட்டார்.
குப்பனுார் அருகே, 2 கி.மீ.,ல் மலைப்பாதையில் வந்த-போது காரில் கோளாறு ஏற்பட்டது. மாரிசாமி காரை திருப்ப முயன்றும் பலனில்லை. இதனால் சாலையோர தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு, 30 அடி பள்ளத்தில் இறங்கியது. இதில் காரில் இருந்த ஜனார்த்தினி படுகாயமும், மற்றவர்கள் லேசான காயமும் அடைந்தனர். ஆம்புலன்ஸ் மூலம் சிறுமியை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்தது தெரியவந்தது. ஏற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.