/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட மூதாட்டி
/
ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட மூதாட்டி
ADDED : டிச 08, 2024 01:29 AM
இடைப்பாடி, டிச. 8-
சரபங்கா ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட மூதாட்டியை, தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
தேவூர் அருகே சென்றாயனுாரை சேர்ந்தவர் ஆராயி, 73. இவரது கணவர் அம்மாசி, 6 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். இவர்களது, 3 மகன்களுக்கும் திருமணமாகிவிட்டது. இதனால் ஆராயி, அவர்களுக்கு சொந்தமாக அரசிராமணியில் உள்ள விவசாய நிலத்தை, சென்றாயனுாரில் இருந்து சரபங்கா ஆற்று தரைவழி பாதை வழியே சென்று பார்த்து வந்துள்ளார்.
சில நாட்களாக, சரபங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அப்பகுதி வழியே செல்ல முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் ஓரளவு தண்ணீர் குறைந்ததால் சிலர் சென்று வந்தனர். இதனால் நேற்று மதியம், 3:00 மணிக்கு சரபங்கா ஆற்றின் தரைவழி பாதை வழியே ஆராயி சென்றார். அப்போது வழுக்கி விழுந்த அவரை, தண்ணீர் இழுத்துச்சென்றதில் மூழ்கியுள்ளார். அக்கம் பக்கத்தினர் பார்த்து, அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
இதை அறிந்து அங்கு வந்த இடைப்பாடி தீயணைப்பு துறையினர், 4 மணி நேரம் தேடியும் ஆராயியை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரம் என்பதால், நாளை(இன்று) காலை தேடும் பணி தொடரும் என, தேவூர் போலீசார் தெரிவித்தனர்.