/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கடலில் கலந்து வீணாகும் நீரில் 5 டி.எம்.சி.,யை சரபங்கா ஆற்றில் சேர்க்க அன்புமணி கோரிக்கை
/
கடலில் கலந்து வீணாகும் நீரில் 5 டி.எம்.சி.,யை சரபங்கா ஆற்றில் சேர்க்க அன்புமணி கோரிக்கை
கடலில் கலந்து வீணாகும் நீரில் 5 டி.எம்.சி.,யை சரபங்கா ஆற்றில் சேர்க்க அன்புமணி கோரிக்கை
கடலில் கலந்து வீணாகும் நீரில் 5 டி.எம்.சி.,யை சரபங்கா ஆற்றில் சேர்க்க அன்புமணி கோரிக்கை
ADDED : செப் 05, 2025 01:26 AM
மேட்டூர், ''மேட்டூர் அணையில் இருந்து கடலில் கலந்து வீணாகும் நீரில், 5 டி.எம்.சி.,யை சரபங்கா ஆற்றில் கொண்டு சேர்த்தால், அந்த நீர் திருமணிமுத்தாறு, ஆத்துாரில் உள்ள வசிஷ்ட நதி வழியே கடலுார் வரை செல்லும்,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.
பா.ம.க., தலைவர் அன்புமணி, சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்த மல்லிகுந்தத்தில், அக்கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்க நேற்று வந்தார். முன்னதாக அவருக்கு மேச்சேரி ஒன்றிய எல்லையான தொப்பூரில், மதியம், 2:00 மணிக்கு, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அன்புமணி பேசியதாவது:
தொப்பூர் கணவாய் சாலையில் விபத்தை தவிர்க்க, பாலம் அமைக்க, 1,050 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கிய மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, 'நிதி ஒதுக்கீடு செய்தது சந்தோஷம்தானே' என, என்னிடம் கேட்டார். அவரிடம், சேலம் -உளுந்துார்பேட்டை, புதுச்சேரி - கிருஷ்ணகிரி சாலையை, 4 வழிச்சாலையாக மாற்றவும், சேலத்தில் புறவழிச்சாலை அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளேன். அதற்கும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து கடலில் கலந்து வீணாகும் நீரில், 5 டி.எம்.சி.,யை சரபங்கா ஆற்றில் கொண்டு சேர்த்தால், அந்த நீர் திருமணிமுத்தாறு, ஆத்துாரில் உள்ள வசிஷ்ட நதி வழியே கடலுார் வரை செல்லும். சேலத்தில் பனமரத்துப்பட்டி ஏரியில், 1 டி.எம்.சி., நீரை சேமிக்க முடியும். அதில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி, 106 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து வீணடித்து விட்டனர். தி.மு.க., ஆட்சி, முடிவுக்கு வர இன்னும், 4 மாதங்கள் மட்டும் உள்ளது. நீங்கள் எதிர்பார்த்த கூட்டணியை விரைவில், பா.ம.க., அமைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வன்னியர் சங்க மாநில தலைவர் கார்த்தி, மாவட்ட தலைவர் மாணிக்கம், தர்மபுரி எம்.எல்.ஏ., வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.