/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எம்.எல்.ஏ.,வை கைது செய்யக்கோரி அன்புமணி ஆதரவாளர் ஆர்ப்பாட்டம்
/
எம்.எல்.ஏ.,வை கைது செய்யக்கோரி அன்புமணி ஆதரவாளர் ஆர்ப்பாட்டம்
எம்.எல்.ஏ.,வை கைது செய்யக்கோரி அன்புமணி ஆதரவாளர் ஆர்ப்பாட்டம்
எம்.எல்.ஏ.,வை கைது செய்யக்கோரி அன்புமணி ஆதரவாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 06, 2025 01:30 AM
மேட்டூர், :பெத்தநாயக்கன்பாளையம், வடுகத்தம்பட்டி, மத்துார் பிரிவு தரைப்பாலம் அருகே, பா.ம.க.,வை சேர்ந்த, ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக, சம்பவ நாளில், அன்புமணி ஆதரவாளர்கள், 20 பேர் மீது ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிந்தனர்.
இந்நிலையில், அன்புமணி ஆதரவாளர்களான, மேட்டூர் தொகுதி, பா.ம.க., நிர்வாகிகள், நேற்று மதியம், மேச்சேரி பஸ் ஸ்டாண்ட் அருகே, ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில துணை தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
அதில் ராமதாஸ் ஆதரவு, பா.ம.க., - எம்.எல்.ஏ., அருளை கைது செய்யக்கோரியும், போலீசார் வழக்குப்பதிந்த, அன்புமணி ஆதரவாளர்களை விடுவிக்க வலியுறுத்தியும், கோஷம் எழுப்பினர். இதில் மாநில இளைஞர் சங்க செயலர் ராஜசேகரன், மேச்சேரி பேரூர் செயலர் கோபால், மகளிர் அணி நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, மேட்டூர் - தொப்பூர் சாலையில், சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டு, பின் கலைந்து சென்றனர்.
அதேபோல் ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே, பா.ம.க.,வின் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், எம்.எல்.ஏ., அருளை கைது செய்ய கோஷம் எழுப்பினர். மாநில செயற்குழு உறுப்பினர் பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.

