/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளியில் சத்து மாத்திரைகள் எரிப்பு அங்கன்வாடி ஊழியரிடம் விசாரணை
/
பள்ளியில் சத்து மாத்திரைகள் எரிப்பு அங்கன்வாடி ஊழியரிடம் விசாரணை
பள்ளியில் சத்து மாத்திரைகள் எரிப்பு அங்கன்வாடி ஊழியரிடம் விசாரணை
பள்ளியில் சத்து மாத்திரைகள் எரிப்பு அங்கன்வாடி ஊழியரிடம் விசாரணை
ADDED : ஜூலை 11, 2025 01:27 AM
சேலம், சேலம், தாதகாப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு, கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவியருக்கு வழங்க, சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. ஆனால் அங்கன்வாடி பெண் ஊழியர், அந்த மாத்திரை மூட்டைகளுக்கு, நேற்று முன்தினம் இரவு தீ வைத்தார். மக்கள் பார்த்து, மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது பரவி வருகிறது.
இதனால் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், அதிகாரிகள், எரித்த பெண்ணிடம் விசாரித்தபோது, காலாவதி மாத்திரைகள் என தெரிந்தது. இருப்பினும் வேறு காரணம் உள்ளதா என, விசாரணை நடக்கிறது.
இதுதொடர்பாக, மனித உரிமை கழகத்தினர், மக்கள், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய மருந்துகளை எதற்காக எரித்தனர். காலாவதி என தெரிந்தால், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஊழியர் தன்னிச்சையாக எரித்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளனர்.