/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அங்கன்வாடி ஊழியர்கள் பிச்சை எடுத்து போராட்டம்
/
அங்கன்வாடி ஊழியர்கள் பிச்சை எடுத்து போராட்டம்
ADDED : பிப் 18, 2026 07:51 AM

சேலம்: பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்க, சேலம் மாவட்ட மையம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. மாநில துணைத்தலைவர் சரோஜா தலைமை வகித்தார். 15ம் நாளான நேற்று, அங்கன்வாடி ஊழியர்கள் ஒரு சேர மேளம் அடித்து, கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக, த.வெ.க.,வின் சேலம் மத்திய மாவட்ட செயலர் பார்த்திபனும், மேளம் அடித்து, அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற, தமிழக அரசை வலியுறுத்தினார். அதை ஆமோதித்து அங்கிருந்த சிலர், விசில் அடித்து பங்களிப்பை வெளிப்படுத்தினர்.
பின் சரோஜா கூறுகையில், ''நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடர், வரும், 20ல் முடிவதற்குள், அங்கன்வாடி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப் படுவர் என்ற அறிவிப்பை முதல்வர் வெளியிட்டு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்,'' என்றார்.

