/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
5--ஜி சேவைக்கான புதிய மொபைல் கேட்டு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
5--ஜி சேவைக்கான புதிய மொபைல் கேட்டு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
5--ஜி சேவைக்கான புதிய மொபைல் கேட்டு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
5--ஜி சேவைக்கான புதிய மொபைல் கேட்டு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 22, 2025 01:49 AM
நாமக்கல், 5--ஜி சேவைக்கான புதிய மொபைல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள் மற்றும் 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகள் ஆகியோருக்கு, இணை உணவு வழங்குவதற்கு முகப்பதிவு போட்டோ பதிவு செய்தால் மட்டுமே வழங்க வேண்டும் என்ற, முறையை மத்திய, மாநில அரசுகள் அறிமுகப்படுத்தி உள்ளன.
இதனால், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு, முன்பருவ கல்வி நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதோடு, பணிகளை செய்வதற்கான மொபைல்போன் வழங்காத சூழலில் தரவுகளை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு அறிமுகப்படுத்தி உள்ள புதிய நடைமுறையை கைவிட கோரி, நேற்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அந்த வகையில், நாமக்கல்-சேந்தமங்கலம் சாலை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டார தலைவர் மலர்கொடி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரேமா முன்னிலை வகித்தார். இதில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், இணை செயலாளர் இளங்கோவன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மைய பணிகளை செய்வதற்கு, 5-ஜி சேவைக்கான புதிய மொபைல்போன் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களை, பயனாளர்களின் தரவுகளை பதிவு செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.