ADDED : ஆக 22, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் மாவட்டம் அரியானுார் கஞ்சமலை வனப்பகுதியில், சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையில் வனத்துறையினர், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இரட்டை குழல் துப்பாக்கியுடன் சுற்றிய, 3 பேரை பிடித்து விசாரித்ததில், எஸ்.பாப்பாரப்பட்டியை சேர்ந்த தமிழ்வாணன், 41, மெய்யப்பன், 34, குமரசேன், 31, என்பதும், விலங்குகளை வேட்டையாட வந்ததும் தெரிந்தது. அவர்களை கைது செய்த வனத்துறையினர், துப்பாக்கி, 3 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.