/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆஞ்சநேயர் கோவிலில் அன்னப்பாவாடை உற்சவம்
/
ஆஞ்சநேயர் கோவிலில் அன்னப்பாவாடை உற்சவம்
ADDED : ஜூலை 10, 2025 01:29 AM
சேலம், ஆனி மாதத்தையொட்டி பெருமாள் கோவில்களில் நடத்தப்படும், 'ஜேஷ்டாபி ேஷகம்', சேலம், பொன்னம்மாபேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று நடந்தது. மூலவர் அனுமனுக்கு, பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல வகை பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. மதியம், வெள்ளி கிரீடம், புது பட்டு வஸ்திரம், வடைமாலை சார்த்தி அலங்கரிக்கப்பட்டது.
கருவறை முன் புளியோதரை, தயிரன்னம், தேங்காய் சாதம் உள்ளிட்ட 'சித்ரன்னங்கள்', பழங்கள், இனிப்புகளால் அலங்கரித்து, 'அன்னப்பாவாடை' எனும் ஜேஷ்டாபி ேஷக படையல் வைக்கப்பட்டது. பட்டாச்சாரியார்கள் பூஜை செய்து மகா தீபாராதனை காட்டினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முடிவில் சித்ரன்னங்கள், பிரசாதமாக வழங்கப்பட்டது.