/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லட்டு தேரில் தங்க கவசத்தில் ஜொலித்த அன்னபூரணி
/
லட்டு தேரில் தங்க கவசத்தில் ஜொலித்த அன்னபூரணி
ADDED : நவ 01, 2024 01:53 AM
லட்டு தேரில் தங்க கவசத்தில்
ஜொலித்த அன்னபூரணி
சேலம், நவ. 1-
ஹரிஹர தேவாலயத்தில் லட்டு தேரில் அன்னபூரணி தங்க கவசத்தில் ஜொலித்தார்.
தீபாவளியையொட்டி சேலம், செவ்வாய்ப்பேட்டை அக்ரஹாரத்தில் ஹரிஹர தேவாலயத்தில், சாஸ்தா சேவா சமிதி நித்ய அன்னதான ட்ரஸ்ட் சார்பில், 11ம் ஆண்டாக, அன்னபூரணி லட்டு தேர் தரிசன வைபவம் நேற்று நடந்தது. முன்னதாக அன்னபூரணி அம்மனுக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து பட்டாடை உடுத்தி, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின் லட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அன்னபூரணி அம்மனை எழுந்தருளச்செய்தனர். தொடர்ந்து வேதங்கள் முழங்க அன்னபூரணி அம்பாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அவர்களுக்கு அம்மனுக்கு சாத்தப்பட்ட லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.